தர்மபுரி ஆக. 30: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில மையம் சார்பில், மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரட்ரிக் ஏங்கல்ஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில ஆலோசகர் கண்ணன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில், தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி நன்றி கூறினார்.
+
Advertisement