பாப்பாரப்பட்டி, நவ. 29: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே பி.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, இண்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, பெருமாள் மகன் பிரகாஷ்(32) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


