பாப்பாரப்பட்டி, நவ. 29: பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில், ஊர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு ஹோமம் நடத்தி விழாக்குழுவினருக்கு காப்பு கட்டுதல் நடந்தது. காளியம்மன் கோயில் முதல் பாப்பாரப்பட்டி திரௌபதி அம்மன்கோயில் வரை மேள தாளங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இரவு வாண வேடிக்கை நடந்தது. நேற்று யாகசாலை அமைக்கப்பட்ட முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று 3ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகாபூர்ணாகுதி நடைபெறுகிறது. நாளை வியாழக்கிழமை காலை 8-30 மணிக்கு ஊர் மாரியம்மன் மூலவர், கோபுரம் மற்றும் பரிவார சகிதம் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் மாதேஅள்ளி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
+
Advertisement


