காரிமங்கலம், அக்.29: காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், சட்டவிரோத மண் திருட்டு நடந்து வருவதாக வந்த புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டார். இதையடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மொரப்பூர் ரோடு மேம்பாலம் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். விசாரணையில், கொடாப்பு நாகப்பன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் கரகபட்டி பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கனிமவளத்துறை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
