தர்மபுரி, ஆக. 29: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பத்தளஅள்ளியை சேர்ந்தவர் அக்குமாரி. இவரது மனைவி மங்கம்மாள் (55). இவரது தம்பி ராஜூகண்ணு. அக்கா, தம்பி இருவரும், நேற்று முன்தினம் கடத்தூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றனர். அரூர் மெயின்ரோடு, குரும்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த மினிசரக்கு வேன், பைக் மீது மோதியது. இதில் ராஜூகண்ணு, மங்கம்மாள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி மங்கம்மாள் இறந்தார். ராஜூகண்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement