தர்மபுரி, நவ. 28: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் வன்னியகுலம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகன் (40). தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு, வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவை உடைக்கும் முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. மர்ம நபர்கள் கொள்ளையடிக்க வந்து, ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் தப்பி ஓடியிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

