தர்மபுரி, நவ.28: தர்மபுரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி 4 ரோடு, உழவர் சந்தை, பெரியார் சிலை ஆகிய இடங்களில் பிரமாண்ட கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல், தர்மபுரி ரோட்டரி மாற்றுத்திறனாளிகள் பள்ளியில், குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் காவேரி, ஏஎஸ்.சண்முகம், பெரியண்ணன், மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முல்லைவேந்தன், அயலக அணி ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

