தர்மபுரி, அக்.28: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் எஸ்ஐ மதியழகன் மற்றும் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, மோதூர்மலை அடிவாரத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் சூதாடிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(40), மற்றொரு பெரியசாமி(46), சின்னசாமி(55) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.24,600 ரொக்க பணத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


