காரிமங்கலம், நவ.27: காரிமங்கலம் வெள்ளையன் கொட்டாவூர் மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம் நடந்தது. இதையொட்டி நாள்தோறும் மண்டல பூஜை நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று காலை அம்மனுக்கு மகா அபிஷேகம், வெள்ளி சாத்துபடி, மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை வெள்ளையன் கொட்டாவூர் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
+
Advertisement


