தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயக்கனஅள்ளி ஊராட்சி சோலைக்கொட்டாய் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, பள்ளியில் படிக்கும் 315 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ரஜினி, சம்பத், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கோவிந்தராஜ், பெரியண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


