தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 76வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அனைத்து துறை அலுவலர்களும் வாசித்தனர். இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும் உள்ளிட்ட குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


