பாலக்கோடு, செப்.27: பாலக்கோடு ஒன்றியம் பெலமாரனஅள்ளி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை கலெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். பிடிஓக்கள் ரேணுகா, ஜோதிகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆ.மணி எம்.பி., பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முனியப்பன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், அரசு வக்கீல் முருகன் ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர். பெலமாரனஅள்ளி, கணபதி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதில் மருத்துவ காப்பீடு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை என 20 பயனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஊராட்சி செயலாளர்கள் முனிவேல், சதிஷ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
+
Advertisement