பாப்பிரெட்டிப்பட்டி, செப்.27: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி சார்பில் ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செயல்படுத்துவதை, வாக்குச்சாவடி முகவர்களை அப்பணியில் ஈடுபடுத்தி ஆய்வு செய்வது குறித்தும், கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைவது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில, வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்டனர்.
+
Advertisement