தர்மபுரி, ஆக.27: தர்மபுரி ஒன்றியம், குப்பூர் ஊராட்சியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஆர்டிஓ காயத்ரி தலைமையில் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை ஆர்டிஓவிடம் வழங்கினர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைரீதியான அதிகாரிகளிடம் வழங்கிய ஆர்டிஓ.,காயத்ரி, விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் மாது, செல்லத்துரை, தாசில்தார் சௌகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், ஊராட்சி செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement