தர்மபுரி, நவ.26: தர்மபுரி மாவட்டம், அரூர் ஜடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் பிரசாத் (25). இவர் நேற்று முன்தினம், தனது நண்பர் தரண் என்பவரை தனது டூவீலரில் ஏற்றி கொண்டு, ஜடையம்பட்டி- மொரப்பூர் சாலையில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார். பின்னர், மொரப்பூர்- திருப்பத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, பிரசாத்தின் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரசாத், தரண் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பிரசாத் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். காயமடைந்த தரண் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


