பென்னாகரம், நவ. 26: பீகார் மாநிலம், பாட்னா சம்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிகர் பிரசாத் மகன் முன்னாகுமார்(30). பெரியாம்பட்டியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 23ம் தேதி, நண்பர்கள் 8 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சென்றார். ஊட்டமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்த போது, முன்னாகுமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலின் பேரில், ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முன்னாகுமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவரது உடல் செங்கப்பாடி காவிரி ஆற்றில் நேற்று மீட்கப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


