பாப்பாரப்பட்டி, செப். 26: பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளான திருமல்வாடி, கிட்டம்பட்டி, தொட்லாம்பட்டி, பனைக்குளம், பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், ஏராளமான விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, நிலக்கடலை பயிர்கள் செழித்து வளர்ந்தது. தற்போது நிலக்கடலைகளை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பணியாட்கள் கிடைக்காத காரணத்தினாலும், கூலி அதிகம் கேட்பதாலும், விவசாயிகள் நிலக்கடலைகளை குடும்பத்தோடு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement