நல்லம்பள்ளி, செப். 26: நல்லம்பள்ளி அடுத்த கமல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (35). இவர் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் ஆடுகள், மாடுகள் மற்றும் ரேடியோ செட் அமைப்பதற்கு தேவையான பொருள்களை வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மழை பெய்த போது, கூரை வீட்டின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்தது. அப்போது கூரை வீட்டில் கட்டியிருந்த ஆடு, மாடுகள் தப்பி ஓடியது. ஆனால் எல்இடி லைட், பாத்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இடி இறங்கி கூரை வீடு எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
+
Advertisement