பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 25: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியார் அணையில் இருந்து, உபரிநீர் திறந்து விடப்பட்டதை அடுத்து ஆற்றங்கரையோரத்தில் உள்ள வெங்கடாசமுத்திரம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள வாணியாற்றின் பாலம் அருகே பாப்பிரெட்டிப்பட்டி மில்லில் இருந்து, பொம்மிடி சாலை வரை பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் உமா ஆகியோர், ஆற்றங்கரையோரம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பார்வையில் படும் படியாக வைத்தனர். பொதுமக்கள் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ செல்ல வேண்டாம். மேலும், ஆடு, மாடுகளை கரையோர பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல வேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆற்றில் குளிக்க வேண்டாம். பாதுகாப்பாக இருப்பதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
+
Advertisement



