தர்மபுரி, நவ.25: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் செந்தில், செல்வம், லட்சுமி, கௌசல்யா, மேகலா, ரவி, சங்கீதா, தமிழ்செல்வி, மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர், நேற்று தர்மபுரி கலெக்டர் சதீஸிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி தலைவராக மாரி என்பவர் உள்ளார். இவரது செயல்பாடுகள் முறையாக இல்லை. கவுன்சிலர்களிடம் தவறான வார்த்தைகளால் பேசுகிறார். பேரூராட்சி பணத்தை முறையாக செலவிடுவது இல்லை. பேரூராட்சி ஊழியர்களை, தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார். மேலும், அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். இவர் தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே, பேரூராட்சி தலைவர் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
+
Advertisement



