காரிமங்கலம், நவ.25: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த திண்டல் ஊராட்சி தெள்ளனஅள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீமதி(25). இவரது கணவர் தனசேகர்(30). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களாக குழந்தைக்கு சளி தொந்தரவு இருந்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



