பாப்பாரப்பட்டி, அக்.25: தர்மபுரி மாவட்டம் இண்டூர் பஸ் நிலையம் அருகில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பவர் கிரேட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் பாலு தலைமை தாங்கி துவங்கி வைத்தார். மயிலாட்டம், கரகாட்டம், பம்பை மற்றும் தவில் கலைஞர்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் மூலம் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். இண்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
+
Advertisement


