பாப்பிரெட்டிப்பட்டி, அக்.25: கடத்தூர் ஒன்றியம் மயிலாபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும், விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் சிஐடியூ தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்ட தலைவர் தீர்த்தகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருச்சுனன், மலைசங்கம் மாவட்ட செயலாளர் மல்லையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் தனுஷன், விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி, பொருளாளர் பொன்னுசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா, ஜனநாயக வாலிபர் சங்க வட்ட செயலாளர் ராகப்பிரியா, மாவட்ட தலைவர் குறளரசன், மலைவாழ் மக்கள் சங்க வட்ட செயலாளர் வரதராஜன், வட்டத் தலைவர் மணி, அம்புரோஸ், கண்ணகி, மாதர் சங்க வட்ட தலைவர் இளவரசி, தங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


