அரூர், செப்.25: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெளிமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்நடைகனை வாங்க வந்தனர். நேற்றைய சந்தையில் மாடுகள் ரூ.6,500 முதல் ரூ.27,000 வரையும், ஆடுகள் ரூ.5,500 முதல் ரூ.10,500 வரை ரூ.40 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement