தர்மபுரி, செப்.25: தர்மபுரி -கிருஷ்ணகிரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில், தர்மபுரி மருந்து வணிகர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது. முன்னாள் நிர்வாகிகள் தலைவர் முரளிதரன், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட சங்கத்தின் புதிய தலைவராக திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளராக சேகர், பொருளாளராக ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தர்மபுரி மண்டல மருந்து வணிகர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement