தர்மபுரி, செப்.24: வாசிப்பு தினத்தை முன்னிட்டு தர்மபுரி வாசிக்கிறது என்ற தலைப்பில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாசித்தனர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா தலைமை வகித்து, புத்தகம் படிப்பதனால் வாழ்வில் எவ்வாறு முன்னேற்றம் அடைகிறோம். உயர் பதவிகளுக்கு செல்ல நம்மை தயார் செய்ய இயலும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா, தலைமையாசிரியை சுதா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் புத்தகத்தை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் மஞ்சுளா, உதவி தலைமையாசிரியர்கள் முருகன், கன்னல், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement