தர்மபுரி, செப்.24: தர்மபுரி பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா நடந்தது. விழாவிற்கு பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கீத்குமார், இயக்குனர்கள் சசிகலா பாஸ்கர், பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருணா அற்புதமலர் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பல்வேறு சிறுதானிய ஊட்டச்சத்து உணவுகள் செய்து கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் வரக்கூடிய உணவு வகைகளும், தடுக்கும் சிகிச்சை முறைகள் குறித்து கண்காட்சியில் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. முன்னதாக கடந்த 15ம்தேதி 2025-26ம் கல்வி ஆண்டுக்கான நர்சிங் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி டிஎஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் ராஜாமணி கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஜென்சி பிரியதர்சினி, நர்மதா மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
+
Advertisement