தர்மபுரி, அக்.23:தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு வரை தொடர் மழை பெய்ததால், இன்று (23ம்தேதி) பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் நவம்பர் 15ம்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவித்துள்ளார்.
+
Advertisement