பாப்பாரப்பட்டி, செப்.23:பென்னாகரம் தாலுகா, திருமல்வாடி, கிட்டம்பட்டி, தொட்லாம்பட்டி மற்றும் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் நெல் நாற்று நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளதால், பாப்பாரப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது நெல் நடவுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கிட்டம்பட்டி அருகே மலை அடிவாரத்தில் வயலில் விதைத்த நெல் நாற்றுகளை கட்டு கட்டும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
+
Advertisement