தர்மபுரி, செப்.23: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தர்மபுரி ரோட்டரி சங்கம் சார்பில் மாணவிகள் பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை சுதா தலைமை வகித்து, மாணவிகளிடம் பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் சரோஜி, செயலாளர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தேர்வுகளை பயம் இன்றி எப்படி எழுதுவது, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இதில், பொருளாளர் ஜலஜாராணி, துணை தலைவர் ரமேஷ்குமார், உறுப்பினர் அம்சா, உதவி தலைமையாசிரியர் முருகன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement