அரூர், செப்.23: அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரூர், தீர்த்தமலை, மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நெல் நடவு செய்வதற்காக களை எடுத்தல், நிலத்தை சமன்படுத்துதல், உரமிடுதல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பசுந்தீவனத்திற்காக மக்காச்சோளம், சோளம் ஆகியவற்றை விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரத்திலிருந்து தொடர் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
+
Advertisement