தர்மபுரி, ஆக.23: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலானூர் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (21). இவர் தர்மபுரிக்கு பைக்கில் வந்துள்ளார். அப்பாவுநகர் 5வது தெருவுக்கு எதிரே உள்ள விளையாட்டு மைதானத்துக்கு முன்பு, தனது பைக்கை நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement