தர்மபுரி, ஆக.23: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் முதல் தாளநத்தம் வரை சாலையோரங்களில் உள்ள பள்ளமான பகுதிகளுக்கு மண் கொட்டி சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம், கடத்தூரிலிருந்து தாளநத்தம் செல்லும் சாலையின் இருபுறமும், தார்சாலையில் இருந்து பள்ளமாக இருந்த காரணத்தினால் இருசக்கர வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும், எதிர் எதிர் திசையில் பயணிக்கும் வாகனங்கள், தார் சாலையை விட்டு கீழே இறங்கி செல்லும் போது, பல பகுதிகளில் மெதுவாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை மூலம், தார்சாலையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் கிராவல் மண் கொட்டி சமன் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
+
Advertisement