தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்டம் அரூர் எல்லைப்புடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (51). விவசாயியான இவர் கடந்த 8ம்தேதி அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருடன் பைக்கில், அரூர் நோக்கி சென்றார். வேடியப்பன் கோயில் அருகே வந்த போது, ராஜமாணிக்கம் வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பஸ் நிறுத்தம் செல்வதற்காக ரோட்டை கடக்க முயன்றபோது, எதிரே வந்த பைக் ராஜமாணிக்கத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ மனையில் ேசர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜமாணிக்கம் உயிரிழந்தார். இதுபற்றி அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


