அரூர், ஆக.22: அரூர் பகுதியில் சின்ன வெங்காயம் விலை சரிந்துள்ளதால், கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.55க்கு விற்பனையானது. விலை அதிகரித்ததை தொடர்ந்து வெங்காயம் உபயோகத்தை குறைத்த மக்கள் வாங்குவதை தவிர்த்து வந்தனர். இதனால், மண்டிகளில் வெங்காயம் தேங்கியதால் விலை சரிந்துள்ளது. நல்ல தரமான வெங்காயம் 3 கிலோ ரூ.100க்கு வீதிகளில் கூவி கூவி விற்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மேலும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement