பென்னாகரம், நவ. 21: பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் இரவில் பெய்யும் கனமழையால், ஏரி, குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி, தடுப்பணை வழியாக உபரிநீர் வழிந்தோடுகிறது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப தொடங்கியுள்ளது. ஏரியூர் ஒன்றியம், தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி சிடுவம்பட்டி கிராமத்தில் சாலையோரம் உள்ள குட்டை நிரம்பியது. தொடர்ந்து உபரிநீர் வழிந்தோடும் வழியில் உள்ள தடுப்பணை நிரம்பியது. இதையடுத்து தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நீர்நிலைகள் நிரம்பியதால் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
+
Advertisement


