தர்மபுரி, நவ.19: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (20ம்தேதி) முற்பகல் 10 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சதீஸ் தலைமை வகிக்கிறார். எனவே, தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள், கருத்துகளை எடுத்துக் கூறி பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
+
Advertisement


