அரூர், நவ.19: அரூர் பஸ் நிலைய சிறு வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், நேற்று சங்க தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சரவணன், செயலாளராக செந்தில், பொருளாளராக நாகராஜ், ஆலோசகராக ஓய்வுபெற்ற ஆசிரியர் லோகநாதன், கவுரவ தலைவர்களாக வெங்கடேசன், பர்கத், செய்தி தொடர்பாளராக மணவாளன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்தலைவர் சதாசிவம் உள்ளிட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு அரூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் சின்னசாமி, செயலாளர் அலாவுதீன், பொருளாளர் ஆசைதம்பி, சுரேஷ் ஆகியோர் சால்வை அணிவித்து அறிமுகம் செய்து வைத்தனர். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


