பாப்பாரப்பட்டி, செப்.19: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டி கிராமத்தில் பிலியனூர், தித்தியோப்பனஹள்ளி, நாகதாசம்பட்டி ஊராட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை சான்றுகள் கேட்டும், இலவச பட்டா, பட்டா பெயர் மாற்றம், மின்இணைப்பில் பெயர் மாற்றம் கோரி என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முகாமில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி கலந்து கொண்டு ஆய்வு செய்தார். இதில், மடம் முருகேசன், வானவில் சண்முகம், ராஜூ, முனியப்பன், சரவணன், முனுசாமி, கணேசன், முருகன், வைகுந்தன், ஆவின் மணி, தாமோதரன், முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
+
Advertisement