பாப்பிரெட்டிப்பட்டி, செப்.19: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், இருளப்பட்டி சமுதாய கூடத்தில், 3ம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மகளிர் உரிமைத் தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வாரிசு, சாதி, வருமான சான்றுகள், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர். முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement