காரிமங்கலம், நவ.18: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் மற்றும் போலீசார், கடந்த மாதத்தில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டனர். பல வாரங்களாகியும் இன்ஸ்பெக்டர் பணியிடம் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் போலீஸ் ஸ்டேஷனில் பல புகார்கள் தேக்கமடைந்து, பொதுமக்கள் சிரமப்பட்டனர். குற்றவாளிகளை பிடிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவசங்கரன், காரிமங்கலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று முறைபடி பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement


