தர்மபுரி, அக்.18: தர்மபுரியில் வளிமண்டல சுழற்சி காரணமாக இரு நாட்களாக மழையுடன் கூடிய மேக மூட்டத்துடன் இதமான சீதோஷ்ணநிலை நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த 16ம்தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியது. இதற்கிடையில் வங்க கடலில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சி காரணமாக புயல் உருவானது. இதையொட்டி வடமாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி நகரில் நேற்று முன்தினம் முதல் வெயில் இன்றி காணப்பட்டது. நேற்றும் காலையில் இருந்து வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது. பகல் நேரத்திலேயே குளிர் காற்று வீசியது. நேற்று அதிகாலையில் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மழை பெய்யக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் ஜெர்க்கின் அணிந்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். குளுமையான காற்று இதமான சீதோஷ்ண நிலையை உருவாக்கியுள்ளது.
+
Advertisement


