காரிமங்கலம், அக்.17: காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சட்டவிரோத திருட்டு டீசல் விற்பனை, சந்துகடை மது விற்பனை, கனிமவள கடத்தல் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பான புகாரை அடுத்து, மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பொன்னேரி பகுதியில், குடிசை தொழில் போன்று திருட்டு டீசல் விற்பனை உட்பட பல்வேறு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல், சிவராஜ், ஹரி ஆனந்தன் கோபி, சிவா கார்த்தி, மணி, முருகன் பெருமாள், பழனி ராஜ்குமார், லட்சுமணன் உட்பட 24 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் பல்வேறு குற்ற சம்பவங்களுக்காக 24 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், காரிமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
+
Advertisement