அரூர், செப். 17: அரூர் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டி கடைகள் மற்றும் தரைக்கடைகளை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். அரூர் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்திற்கு இடையூறாக வழிப்பாதையை ஆக்கிரமித்து தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுவதாக, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது. அதை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் சேகர் (பொ) தலைமையில், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நேற்று மதியம் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் சிலர், அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
+
Advertisement