அரூர், அக்.16: அரூர் பஸ்நிலையம், பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் அரூர் நகர காங்கிரஸ் சார்பில் மோடி அரசை கண்டித்து வாக்கு திருட்டுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர் வஜ்ஜிரம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தீர்த்தராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். இதில் வட்டார தலைவர் கணேசன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் மோகன், சிவலிங்கம், அருட்ஜோதிமுருகன், வைரவன், சுந்தரம், ஜெயராமன், செல்வம், லட்சுமணன், சின்னராஜி, பெருமாள், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement