தர்மபுரி, ஆக.15: தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், தர்மபுரி நகருக்குக்குள் நுழையும் சந்திப்பான சேஷம்பட்டி முதல் குண்டல்பட்டி வரையிலான சாலைகளின் இருபுறம் மற்றும் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியனுக்கு புதிய வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல், கலெக்டர் அலுவலகம் முதல் அவ்வை வழி சாலை, தடங்கம் வரை உள்ள சாலைகள் மேம்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
+
Advertisement