தர்மபுரி, அக். 14: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மனைவி சித்ரா (72). கணவன் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சித்ரா, பிறகு வீடு திரும்பவில்லை. இதுபற்றி மகன் கார்த்தி, பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தர்மபுரி பிரேத பரிசோதனை அறையில், 2 நாட்களுக்கு முன்பு, சாலை விபத்தில் சிக்கி பலியான பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கார்த்தியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் சடலத்தை பார்த்து, இறந்து போனது தனது தாய் சித்ரா என்பதை உறுதி செய்தார். பின்னர், சடலம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement