தர்மபுரி, செப்.14: தர்மபுரி அடுத்த சின்னதோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(53). இவர் வீடுகட்டி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். தென்றல் நகரில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில், கட்டுமான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துள்ளார். அதனை எடுப்பதற்காக நேற்று சென்றார். அப்போது அங்கிருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 20 சென்ட்ரிங் ஷீட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட அதியமான்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி சுபாஷ் சந்திரபோஸ்(41) என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement