தர்மபுரி, செப்.14: பாலக்கோடு எஸ்ஐ சரவணகுமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், அதில் வந்த வாலிபர், போலீசார் நிற்பதை பார்த்து விட்டு, டூவீலரை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். டூவீலரை போலீசார் சோதனை செய்ததில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 500 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய வாலிபர் யார், அவர் எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement