தர்மபுரி, நவ. 13: தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டிரைவர், நடத்துனர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ் ராஜ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பாதுகாப்பான இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் செல்வம், துணை மேலாளர் (தொழில்நுட்பம்), துணை மேலாளர் (வணிகம் மற்றும் போக்குவரத்து) மற்றும் ஓட்டுநர், நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
